தினமணி 29.11.2010
நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்த நகராட்சி வேண்டுகோள்
பண்ருட்டி, நவ. 28: பண்ருட்டி கெடில நதியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பயன்படுத்திக் கொள்ளும்படி நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பண்ருட்டி நகராட்சி 22-வது வார்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடைப் பணிகள் முடிவடைந்து உள்ளது. இதை ஆத்மஜோதி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் வரை நவீன எரிவாயு தகன மேடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவும், இறந்த பிரேதம் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கவும் நகர்மன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்கள் மேற்கண்ட தகனமேடையை பயன்படுத்துவதற்காக (29.11.2010) திங்கள்கிழமை முதல் நகராட்சி அலுவலகத்தை அணுகுமாறு ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.