தின மணி 21.02.2013
நவீன மீன் அங்காடி அமையும் இடம்:நகராட்சித் தலைவர் ஆய்வு
சிதம்பரத்தில் ரூ.93 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள நவீன மீன் அங்காடி பணிகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலா சுந்தர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு மீன் மார்க்கெட் பகுதியில் ஹைதராபாத் தேசிய மீன்வளர்ச்சி கழகம் வழங்கிய ரூ.83 லட்சம் நிதி மற்றும் சிதம்பரம் நகராட்சி வழங்கிய நிதி ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.93 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணியை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் அ.தி.மு.க. நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஆணையர்(பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.