மாலை மலர் 30.07.2010
நாகராஜா கோவில் ரதவீதிகளில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
நாகர்கோவில், ஜூலை. 30- செட்டிக்குளம், வடசேரி பகுதிகளில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நடைபாதை களில் இருந்த கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டது.
இன்று காலை நாகராஜா கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதற்காக நகரமைப்பு அலுவலர் கோபால் தலை மையில் ஆய்வாளர்கள் மதியழகன், கிருஷ்ணகுமார், அறிவுடைநம்பி மற்றும் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் சென்றனர். அவர்கள் முதலில் கீழ ரதவீதியிலும் அடுத்து தெற்கு ரத வீதியிலும் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர்.
ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று பிற்பகல் எஸ்.பி. அலுவலக ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது.