தினகரன் 04.08.2010
நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றிய பன்றிகளை வலைவிரித்து பிடித்தனர்
நாகர்கோவில், ஆக.4: நாகர்கோவில் நகராட்சியில் கண்ட படி சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகருக் 1396991858 வெளியே கொண்டு விட்டனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அதன் எதிர்புறம் உள்ள குறுக்குச் சாலை, அருந்ததியர் தெரு, டிஸ்லரி சாலை போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சர்வசுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற் படுவதாக நகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று வடசேரி பஸ் நிலையம் பகுதியில் உள்ள பன்றிகளை பிடித்து நகருக்கு வெளியே கொண்டு விட நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேர்மன் அசோகன் சாலமன் உத்தரவிட்டார். இதனையடுத்து நாகர்கோவில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பன்றிகளை வலை விரித்து பிடித்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிபட்டன. பின்னர் அவற்றை நகருக்கு வெளியே கொண்டு விட்டனர்.