நாகையில் நாளை எரிசக்தி பயன்பாடு கண்காட்சி
நாகையில் சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெறவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் கருவிகள் குறித்த கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு : தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன்படி, தமிழகத்தில் 10 மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும் இக்கண்காட்சி, நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், 10 பிரபல நிறுவனங்கள் மூலம் சூரிய ஆற்றல், காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் கருவிகளின் பயன்பாடுகள் நேரடியாக விளக்கப்படும். காலை 10 முதல் மாலை 7.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.
பார்வையாளர் முன்பதிவு: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமமின்றி பார்வையிடும் வகையில், உரிய நேர ஒதுக்கீடு பெற; 94431 48774 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.