தினமணி 02.08.2010
நாமக்கல்லில் இன்று கொழு, கொழு குழந்தைகள் போட்டி
நாமக்கல், ஆக. 1: நாமக்கல் நகராட்சி தாய்–சேய் நல விடுதியில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
÷நாமக்கல் நகராட்சி நிர்வாகமும், இன்னர்வீல் சங்கமும் இணைந்து உலகத் தாய்பால் வார விழாவை கொண்டாடுவதன் துவக்கமாக, இப் போட்டிகள் நடைபெறுகிறது. ÷விழாவில், கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சமி ரெட்டி நிதியுதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கு சத்துணவுப் பொருட்கள், மருந்துகளும் வழங்கப்படுகிறது.
÷தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பேசுகின்றனர்.
÷ நகர்மன்றத் தலைவர் ரா. செல்வராஜ் தலைமை வகிக்கிறார். இத் தகவலை, நகராட்சி ஆணையர் ஜி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.