தினமணி 12.02.2010
நாமக்கல் நகராட்சியில் இன்று கொசு ஒழிப்பு பணி
நாமக்கல், பிப். 11: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ÷நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் வீடு, வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 200-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வீடுதோறும் சென்று பேட்டக்ஸ், கியூலக், ஆர்மிஜெரஸ் உள்ளிட்ட கொசுப் புழு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க உள்ளனர்.
÷வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர், சாக்கடைத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, கழிப்பறைகளிலும் மருந்து தெளிக்கப்படுóகிறது. பொதுமக்களும் கொசுக்களை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். செப்டிக் டேங் குழாய்களுக்கு வலை கட்டுவது அவசியம். மருந்து தெளிக்க வரும் நகராட்சிப் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.