தினகரன் 28.06.2010
நாமக்கல் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
நாமக்கல், மே 28: நாமக்கல் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1&ம் தேதி தொடங்குகிறது. இந்த பணி சிறப்படைய மக்கள் போதுமான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கேட்டுகொண்டுள்ளார்.
இது குறித்து, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
நாமக்கல் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்பணிக்காக 88 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்பு தொடர்பாக 3ம் கட்ட பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பகுதியும் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவரின்பெயர், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டின் கட்டுமானப்பொருள், குடிநீர்வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி குடும்பத்தில் உள்ள பொருட்கள் சைக்கிள், மோட்டார்சைக்கிள், மொபட், கார், ஜீப், வேன், ரேடியா, தொலைபேசி, போன், கம்யூட்டர் போன்ற விபரங்களும் கணக்கெடுக்கப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான விபரங்களை அளித்து உதவவேண்டும்.இவ்வாறு நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஜூன் 1ல் துவக்கம்