தினமணி 08.04.2013
நாய்களுக்கான காப்பகம் அமைக்க அரகண்டநல்லூர் பேரூராட்சி தீர்மானம்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் நாய்களுக்கான காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்தார். செயல் அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார்.
நாய்களுக்கான காப்பகம் அமைக்கவும், தனலஷ்மி நகரில் 52 மீட்டர் அளவுக்கு கூலி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கவும், புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின் சக்தி தயாரிக்கும் சாதனம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பேரூராட்சி துணைத் தலைவர் ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.