தினமணி 1 4.05.2010
நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
ஆரணி, மே 13: ஆரணி நகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. ஆரணி நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தொடர்ந்து, ஆரணி நகராட்சி, சென்னை உலக அமைதி அறக்கட்டளை ஆகியன இணைந்து, தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் ஆகியவற்றுக்கு கருத்தடை சிகிச்சையை வியாழக்கிழமை செய்தனர். ஆரணிப்பாளையம் சமுதாயக் கூடத்தில் கால்நடை ரமேஷ் தலைமையில் அறக்கட்டளையைச் சேர்ந்த அந்தோணி, ரஞ்சித், ரமேஷ் ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, 10 நாள்கள் இப்பணி நடக்கிறது. இதனை நகராட்சி ஆணையாளர் சசிகலா மேற்பார்வையிட்டார்.