தினமணி 17.02.2014
நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம்
நிலக்கோட்டை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர்
வி.எஸ்.எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தனசேகரன் முன்னிலை
வகித்தார். கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது பற்றியும்
நிலக்கோட்டை நகரில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை கணக்கெடுத்து
சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது. பேரூராட்சி பேருந்து நிலையத்திலுள்ள
கடைகள் ஏலம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர்
சதீஷ்குமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.