தின மணி 22.02.2013
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வறட்சி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்துக்கு தலைவர் சை.வாப்பு தலைமை வகித்தார். பேரூராட்சிச் செயலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீலகிரியை வறட்சி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கோத்தகிரி பேரூராட்சியில் சிசிடிவி யூனிட் வைக்கப்படும். நடப்பாண்டுக்கு தேவையான தெருவிளக்கு உபகரணங்கள், குடிநீர் உதிரி பாகங்கள், பொது சுகாதார பொருள்களை ஆட்சியரின் ஒப்புதல் பெற்று, கொள்முதல் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின்கீழ் தவிட்டுமேடு பகுதியில் நடைபாதை அமைக்கப்படும். மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத் தின்கீழ் காந்தி மைதானத்தில் கழிப்பிடம் அமைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், ஜாபர், கனகராஜ்,மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சுந்தரிநேரு நன்றி கூறினார்.