தினமலர் 25.05.2010
நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடமிருந்து இரண்டு வார்டுகள் பறிப்பு
சென்னை : “”சரிவர துப்புரவு பணி செய்யாததால், நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக இரண்டு வார்டுகளை திரும்ப பெற்று மாநகராட்சியே துப்புரவு பணி செய்ய திட்டமிட் டுள்ளது,” என மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நேற்று மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டத் தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்றக் கூட்டம் முடிந்த பின் மேயர் சுப்ரமணியன், நிருபர் களிடம் கூறியதாவது:தங்க சாலை சந்திப்பு பகுதியில் 19 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பில் மேம் பாலம் கட்ட ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 15 நாட்களில் மேம் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்படும்.நகரில் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம் பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவு பணி செய்கிறது.கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பணியை மேற்கொண்ட இந்த நிறுவனம், துப்புரவு பணியை சரிவர செய்யவில்லை.பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, பலமுறை வலியுறுத்தியும் அந்த நிறுவனம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.மண்டல அளவில் பலமுறை எச்சரிக்கை நோட் டீசும் கொடுக்கப்பட்டது.அதனால், அந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தும் வகையில் முதற்கட்டமாக கோடம்பாக்கம் மண்டலம் 128 (விருகம்பாக்கம் தெற்கு) மற்றும் 129 (சாலிகிராமம்) ஆகிய இரண்டு வார்டுகளில் துப்புரவு பணியை திரும்ப பெற்று மாநகராட்சியே பணியை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளது.அதன் பிறகும் அந்த நிறுவனம் துப்புரவு பணியின் தரத்தை மேம்படுத்தாவிட் டால், நான்கு மண்டலங் களிலும் இருக்கும் பிரதான சாலைகளில் துப்புரவு பணியை மாநகராட்சி மேற் கொள்ளும்.
தொடர்ந்து, புகார்கள் வந்தால் நான்கு மண்டலங்களின் துப்புரவு பணி திரும்ப பெற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.இரண்டு கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான குப்பைத் தொட்டிகள் வாங்கவும், ராயபுரம் கிழக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் 25 கோடி 11 லட்சம் மதிப்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இவ்வாறு மேயர் கூறினார்.