தினமலர் 11.03.2010
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற் றும் பணி இன்று நடக்கிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத் தின் உள்ளே சரியாக பஸ்கள் செல்வதில்லை. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நகர பகுதி சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதிகளவு விபத் துக்கள் நடக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட் டார். அதன்பேரில் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறையினர் கடலூர்–பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப் பம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று (11ம் தேதி) காலை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதற்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர்.