தினமலர் 26.04.2010
நெல்லை மாநகராட்சியில் விரைவில் மனித வள மேம்பாட்டு அறிக்கை
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் 3 மாதங்களில் மனித வள மேம்பாட்டு அறிக்கை தயார் செய்யப்படுகிறது.நெல்லை மாநகராட்சியில் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த மனித வள மேம்பாட்டு அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்த ஆய்வின் நோக்கம் குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக பொருளாதார துறை தலைவர் மாலதி, பேராசிரியர் ஜெயராஜ், சிவகுமரேசன், தாமோதரன், இந்திராதேவி, விமல்டோலி, நாகராஜ் பேசினர். இந்த அறிக்கை 3 மாதங்களுக்குள் தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்பு அலுவலர் சுந்தரி நன்றி கூறினார்.