தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
நெல்லை மாநகராட்சி வழக்குரைஞர் நியமனம்
திருநெல்வேலி மாநகராட்சி வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் ஏ. பால்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி தொடர்பான வழக்குகளை கையாளுவதற்காக மாநகராட்சி
வழக்குரைஞராக திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த ஏ. பால்கனியை
நியமனம் செய்ய சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ஏ. பால்கனியை திருநெல்வேலி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ
வழக்குரைஞராக நியமனம் செய்ய மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் 30-ம் தேதி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஏ. பால்கனியை மாநகராட்சி
வழக்குரைஞராக நியமித்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. மோகன்
உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திருநெல்வேலி
மாநகராட்சி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மாநகராட்சி சார்பில்
வழக்குரைஞர் பால்கனி ஆஜராகி வாதாடுவார் என அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்குரைஞரான ஏ. பால்கனி இதற்கு முன்பு
திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார்
என்பது குறிப்பிடதக்கது.