தினகரன் 08.01.2010
நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது
நெல்லை : நெல்லைக்கு வந்த சுகாதாரதுறை அமைச் சர் எம்ஆர்கே.பன்னீர்செல் வம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச் சல் மக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி மற்றும் சுகா தாரதுறை சார்பில் இந் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலப்பாளையத்தில் ஒரே இடத்தில் 700 சுகாதார பணியாளர்கள் கூடி கூட்டு துப்புரவு பணி நடந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத் தில் உள்ள டாக்டர்களும் இப்பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். தற் போது இந்நோயின் தாக்கம் குறைந்து வருகிறது.
சித்த மருத்துவம் சார்பி லும், ஹோமியோபதி சார்பி லும் இந்நோயை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர், அமுக்கரா சூரணம், பிண்ட தைலம் போன்ற மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2008&ம் ஆண்டில் 30 லட்சத்து 43 ஆயிரத்து 806 பேருக்கு காய்ச்சல் இருந்தது. 2009&ம் ஆண்டில் அது 27 லட்சத்து 43 ஆயிரமாக குறைந்துள்ளது. நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் 897 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கூட வைரஸ் நோய் பரவியிருக்க லாம். பாளை சித்த மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி பிரி வை மாற்றியது மத்திய அரசு முடிவாகும். அதில் நாங்கள் தலையிட முடியாது என் றார்.
முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மைதீன்கான், சுகாதாரதுறை முதன்மை செயலாளர் சுப்பு ராஜ், இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை முதன்மை செயலாளர் ராஜ் குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, மருத்துவதுறை இயக்குனர் டாக்டர் நந்தகோபாலசாமி, கலெக்டர் ஜெயராமன், இணை இயக்குனர் உஷா ரிஷபதாஸ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வல்லுநர்குழு ஆராய்கிறது
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் நோயில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, எலி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை. ரத்த மாதிரி பரிசோதனையில் இது ஒரு புது விதமான வைரஸ் நோய் என்பது தெரிய வந்துள்ளது. இதை கண்டறிய மதுரையில் இருந்து ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம்) ஆராய்ச்சிக்குழு வர உள்ளது. ஏற்கனவே ஓசூரில் இருந்து வந்த பூச்சியியல் வல்லுனர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.