தினமலர் 09.02.2010
பணி செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
வால்பாறை : “டெண்டர்‘ எடுத்த பணிகளை செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கு கழிப்பிடம், நடைபாதை, காம்பவுண்டு சுவர் கட்ட நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு “டெண்டர்‘ டப் பட்டது. ஆனால், இதுவரை இந்தப்பணி செய்ய வில்லை. இதே போல் பல்வேறு இடங்களில் டெண்டர் எடுத்தும் பணி செய்யாமல் பாதியில் கிடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து, வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் தான் “டெண்டர்‘ விடப்படுகிறது. ஆனால், சில பணிகள் டெண்டர் விட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணி செய்யப்படாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பட்டுள்ளது என்றனர்.