தினகரன் 10.06.2010
பண்ருட்டி நகராட்சியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு
பண்ருட்டி, ஜூன் 10: பண்ருட்டி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகிறது. இதை பிடிக்க பல்வேறு தரப்பினர் நகராட்சிக்கு புகார் அளித்தனர்.
அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் உமா மகேஸ்வரி தலைமையில் சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகரன், ஆல்பர்ட் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவள்ளுவர், வி.எஸ்.பி. நகர், லிங்க் ரோடு போன்ற பகுதியில் இருக்கும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி பன்றிகளை பிடிக்க மதுரையில் இருந்து குழுவினர் நேற்று வந்து பண்ருட்டி பகுதிகளில் சுற்றித்திரிந்த 25 பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினர். இதையறிந்த பன்றி உரிமையாளர்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதில் பன்றிகளை பிடித்த குழுவினர் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லாமல் உள்ளனர்.
பண்ருட்டியில் இருந்தே சேலம் பன்றி உரிமையாளர் களிடம் ரூ.3 லட்சத்துக்கு விலை பேசியுள்ளனர்.
இது போன்ற குழு வினரால் செய்யும் குற்றத்தை தடுக்க பன்றிகளை பிடித்த உடனே துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நக ராட்சி தலைவர் பச்சையப்பன், ஆணையாளர், மாவட்ட ஆட்சியாளரை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என் றார்.