தினமலர் 25.03.2010
பண்ருட்டி நகராட்சியை கண்டித்து இறைச்சி வியாபாரிகள் கடையடைப்பு
பண்ருட்டி: பண்ருட்டியில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் நவீன ஆடு வதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆட்டை பரிசோதித்து அறுத்து முத் திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் வதைகூடத்தில் ஆடுகளை அறுக்காமல் தாங்களாகவே அறுத்து வியாபாரம் செய்து வந்தனர்.நகராட்சி ஊழியர்கள் கடந்த வாரம் ஆட்டு இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தி நகராட்சி முத்திரை இல்லாத ஆட்டு இறைச்சிகளை பெனாயில் ஊற்றி அழித்தனர்.இதனையடுத்து ஆட்டு இறைச்சி வியாபார சங்க நிர்வாகிகள் ஆடு அறுத்து முத்திரையிட கடலூர், நெல்லிக்குப்பம் உள் ளிட்ட நகராட்சிகளில் குறைந்த கட்டணம் மட் டுமே வசூல் செய்வதாகவும், பண்ருட்டி நகராட்சியில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண் டித்து நேற்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி தினமலர் நிருபரிடம் கூறியதாவது:பண்ருட்டி நகராட்சியில் நவீன ஆட்டு இறைச்சி புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆடுகளை அறுப்பதற்கு முன் கால்நடை மருத்துவரால் சோதனை செய்த பின்பே நகராட்சி முத்திரையிடப்படுகிறது. நகர மன்ற தீர்மானத்தின் படி 100 ரூபாயாக இருந்த முத்திரை கட்டணம் தற் போது 40 ரூபாயாக குறைக் கப்பட்டுள்ளது. அதன்படி தான் கட்டணம் வசூலிக் கப்படுகிறது என்றார்.
