தின மணி 20.02.2013
பத்மநாபபுரம் நகராட்சியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 8-வது வார்டு, 21-வது வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சிறுமின்விசை மூலம் சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 4 குடிநீர்த் தொட்டிகள் அமைக்க தலா
ரூ. 1.25 லட்சம் வீதம் ரூ. 5 லட்சம் செலவில் சிறுமின் விசை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு இந்தக் குடிநீர்த் தொட்டிகளை ஹெலன்டேவிட்சன் எம்.பி. திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமை வகித்தார். ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்ன பெர்லி, நகர்மன்ற துணைத் தலைவர் பீர்முகமது, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜிஜாராணி, சசிதரன்நாயர், திமுக நகரச் செயலர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.