தினமலர் 13.08.2010
பன்றிகள் வளர்த்தால் நடவடிக்கை:விழுப்புரம் கமிஷனர் எச்சரிக்கைவிழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் நகராட்சியில் உள்ள அனைத்து வார் டுகளிலும் பன்றிக் காய்ச் சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி மருத்துவ அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், நகர சுகாதார செவிலியர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அனைத்து நாட்களிலும் துப்பரவு பணியாளர்களால் தெருக்கள், சாக்கடைகளை தூய்மையாக வைத்திருக்கவும், கொசு மருந்து தெளிக் கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தும் வகையில் பன்றிகள் வளர்க்க கூடாது.மீறி வளர்த்தால் பன்றிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.