தினமலர் 22.09.2010
பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
சென்னை: சென்னை மாநகராட்சியின் ஆறு பகுப்பாய்வு கூடங்களில் 1,859 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து போடப்பட்டது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி மற்றும் பெரம்பூர் ஆகிய ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் போடப்பட்டன. இதில் மூக்கில் போடப்படும், “ஸ்பிரே‘ மருந்து 692 பேருக்கும், 1,167 பேருக்கு தடுப்பூசி என மொத்தம் 1,859 பேருக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. மூக்கில் போடப்படும், “ஸ்பிரே‘ மருந்திற்கு 100 ரூபாயும், தடுப்பூசிக்கு 200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.