தினமலர் 01.04.2010
பயணிகள் குடிநீரால் வியாபாரிகளுக்கு பலன்
தர்மபுரி: தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிக்க வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து வியாபாரிகள் தண்ணீர் எடுத்து செல்வதால், வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தண்ணீருக்கு பரிதவிக்கும் நிலையுள்ளது.தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தண்ணீர் பருக வசதியாக நகராட்சி சார்பில் தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள் அதிக அளவில் குடங்களை வைத்து தண்ணீர் பிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் கிராம பகுதி மக்கள் பகல் நேரங்களில் தொட்டிகளில் வியாபாரிகள் தண்ணீர் பிடிப்பதால், தண்ணீர் குடிக்க முடியாத நிலையுள்ளது. இதனால், காசு கொடுத்த தண்ணீர் பாக்கெட்களை பொதுமக்கள் வாங்கி பருகும் நிலையுள்ளது. நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் கட்டி வழங்கிட வேண்டும்.
சேவை அமைப்புகள் மூலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்‘ என பயணிகள் எதிர்பார்க்கின்றனர