தினமணி 05.05.2010
பயணியர் நிழற்குடை திறப்பு விழா
ஈரோடு, ஏப். 4: ஈரோடு–பெருந்துறை சாலையில் பழையபாளையம் பஸ் நிலையத்தில் ஈரோடு பால் நகர அரிமா சங்கம் சார்பில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
÷காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) சி.ஆர்.நாகராஜ் இந்நிழற்குடையை அண்மையில் திறந்து வைத்தார்.
பிரமுகர் வீ.ப.தங்கமுத்து தலைமை வகித்தார். வீரப்பன்சத்திரம் நகராட்சித் தலைவர் மல்லிகாநடராஜன், அரிமா மாவட்ட ஆளுநர் ஆர்.கல்யாணசுந்தரம், பிரமுகர்கள் பி.ராமசாமி, ஆர்.கார்த்திக், ஆர்.சதீஸ்குமார் முன்னிலை வகித்தனர்.
÷நகராட்சி கவுன்சிலர்கள் வீனஸ் பழனிசாமி, ரத்தினம் தங்கமுத்து, அரிமா சங்க நிர்வாகிகள் கந்தசாமி, பாலசுப்பிரமணியம், முருகேசன், ஜெகதீசன், செல்வராஜ், ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.