தினமலர் 09.03.2010
பயன்பாட்டிற்கு வந்த எரிவாயு தகன மேடை
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் 1.5 கோடி ரூபாய் கட்டப்பட்ட “நவீன எரிவாயு தகனமேடை‘ செயல்பட தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யாரேனும் இறக்க நேரிட் டால் அடக்கம் செய்வது பிரச்னையாக இருந்தது. இப்பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என்று ஒட்டன் சத்திரம் எம்.எல்.ஏ., சக்கரபாணியிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் ஒட்டன்சத்திரம் சத்யா நகரில் இருந்து பழநிக்கவுண்டன்புதூர் செல் லும் ரோட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.