தினமலர் 25.08.2010
பயன்பாட்டிற்கு வராத நகராட்சி அலுவலக கட்டடம்
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி புதிய அலுலக கட்டடம் கட்டிமுடித்து பல மாதங் களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு 60 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட் டுள்ளது. இதில் கமிஷனர் அலுவலகம், நகராட்சி தலைவர் அலுவலகம், சுகாதார அலுவலகம், கட்டட ஆய்வாளர் அலுவலகம் உட்பட பத்துக்கும் மேற் பட்ட அறைகள் உள் ளன. பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் பகுதியில் பிப்ரவரி யில் சமத்துவபுரம் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே நகராட்சி புதிய கட்டடத்தை திறப்பு விழா செய்தார். இருந்தபோதும் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அலுலவக பணியாளர்கள் பழுதடைந்த கட்டடத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்துவருகின்றனர். மழை பெய்யும் போது பழைய கட்டடத்தில் மழை நீர் கசிவு ஏற்படுவதால் பணியாளர்கள் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத நகராட்சி அலுவலகத்தை விரைவில் பயன்பாட் டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.