தினமலர் 03.05.2010
பரமக்குடியில் மே தின விழா
பரமக்குடி : பரமக்குடியில் மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங் கள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டன. பரமக்குடி ஓட்டப்பாலம் நகராட்சி வணிக வளாகத்தில் நடந்த கூட் டத்தில் அமைச்சர் தங்கவேலன், ராம்பிரபு எம்.எல்.ஏ., பரமக்குடி ஒன்றிய தலைவர் திசைவீரன் கலந்து கொண்டு, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க போர்டை திறந்து வைத்தானர். மதுரை அப்போலோ டாக்டர் காந்தி, அரசு வக்கீல் முத்துக்கண்ணன் , சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, செயலர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலமானது ஐந்து முனை ரோடு வழியாக சென்று முருகன் கோயில் திடலில் நிறைவடைந்தது.
பரமக்குடி மஞ்சள் பட்டினம் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நந்தவன திடலில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந் திரம் வழங்கப் பட்டது. தலைவர் விஜயகுமார், செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தீபம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ் மாநில மே தின பொதுக்கூட்டம் மாநில பொது செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் கிளை சார்பாக மேதின விழா கொண்டாடப்பட் டது. கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜேக்கப் டி.ஆர்.இ.யூ.,கொடியை ஏற்றி வைத்தார். துணை செயலாளர் நாகரெத்தினம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் பேசினர்.