தினகரன் 07.06.2010
பருவமழை தாமதத்தால் பீதியடைய தேவையில்லை போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது
மும்பை, ஜூன் 7: இந்த ஆண்டு பருவமழை தாமத மாக பெய்தாலும்கூட மும் பையில் தண்ணீர் பிரச்னை ஏற்படாது. காரணம், ஜூலை மாதம் வரையில் தேவைப்படும் தண்ணீரை மாநகராட்சி தேக்கி வைத்து இருக்கிறது.
மாநகராட்சி முன்கூட்டி யே நன்றாக திட்டமிட்டு கடந்த ஆண்டில் இருந்து குடிநீர் வெட்டுகளை அமல் படுத்தி வந்திருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு அக் டோபரில் இருந்து 15 சத வீதம் குடிநீர் வெட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மும்பை நகருக்கு வரும் ஜூலை 21ம் தேதி வரை தேவைப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப் பட்டுள் ளது. எனவே பருவ மழை தாமதமானாலும் எந்த பாதிப்பும் வராது. மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும் போது, “மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகை யில் மும்பை மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது.
ஏனெ னில் கடந்த ஆண்டு குளிர் காலத்தின் போது தண்ணீ ரை குறைவாகவே சப்ளை செய்தோம். அதிக குளிராக இருந்ததால் பொதுமக்கள் அதை உணர்ந்து கொள்ள வில்லை. இதன் மூலமாக இந்த ஆண்டு கோடை காலத்துக்கு தேவைப்படும் தண்ணீரை சேகரிக்க முடிந் ததுÓ என்றார்.