தினமணி 15.06.2010
பல்லடத்தில் இன்று நகராட்சி அவசரக் கூட்டம்
பல்லடம்
, ஜூன் 14: பல்லடம் நகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் அத்திக்கடவு குடிநீர் பற்றாக்குறையாக வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.பல்லடம் நகராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் தினசரி
18 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் அத்திக்கடவு குடிநீர் வழங்கி வந்தது. சில மாதங்களாக இக் குடிநீர் அளவு குறைந்து வந்தது. இதனால் மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நகராட்சி கவுன்சிலர்கள் திணறி வந்தனர்.பல வார்டுகளில் கவுன்சிலர்களின் வீடுகளை மக்கள் முற்றுகையிட்டனர்
. இதனை தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். ஆனால் குடிநீர் அளவு முன்பு வழங்கப்பட்டது போல் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் நகராட்சி தலைவர் ஆர்
. ராமமூர்த்தி குடிநீர் பிரச்னை குறித்து ஆலோசிக்க, பல்லடம் நகராட்சி அவசரக் கூட்டத்தை இன்று காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார்.