தினமணி 24.09.2010
பல்லடத்தில் உழவர் சந்தை அமைக்க நகராட்சி ஒப்புதல்
பல்லடம், செப். 23: பல்லடத்தில் உழவர் சந்தை அமைக்க நகராட்சி மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
÷பல்லடத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பல்லடத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான சந்தைப்பேட்டை மைதானத்தில் 2.35 ஏக்கர் நிலத்தில் 60 சென்ட் இடம் வழங்குமாறு நகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று சந்தைப்பேட்டை மேற்கு பகுதியில் உழவர் சந்தை அமைக்க 58 சென்ட் இடத்தை வேளாண் வணிகத்துறைக்கு வழங்க பல்லடம் நகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நகராட்சி தலைவர் ஆர்.ராமமூர்த்தி தெரிவித்தார்.