தினமலர் 09.08.2010
பள்ளிகளுக்கான விளையாட்டு: மாநகராட்சி பள்ளி சாம்பியன்
கோவை: பள்ளி மாணவியருக்கான வாலிபால் போட்டியில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், கிறிஸ்துஅரசர் பாலிடெக்னிக் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன. கால்பந்து போட்டியில், சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி வென்றது. கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பிஷப் அக்வினாஸ் கோப்பைக்கான வாலிபால் போட்டி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடந்தன.மாணவியருக்கான வாலிபால் இறுதி லீக் போட்டியில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது. சின்னத்தடாகம் அரசு பெண்கள் பள்ளி இரண்டாமிடம் வென்றது. பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி மூன்றாமிடமும், மாரியம்மாள் பள்ளி நான்காமிடமும் பெற்றன.பள்ளி மாணவருக்கான கால்பந்து இறுதி லீக் போட்டியில், சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி முதலிடமும், சேலம் லிட்டில் ப்ளவர் பள்ளி இரண்டாமிடமும், மணி மேல்நிலை பள்ளி மூன்றாமிடம் வென்றன. இன்டேன்ட் ஜீசஸ் பள்ளி நான்காமிடம் பெற்றது.பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான இறுதி போட்டியில், கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி, 4-2 கோல் கணக்கில் டை–பிரேக்கரில் மதுரை லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியை வென்றது. சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாவது இடத்தை பிடித்தது. கோவை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்தார். கலால், சேவை வரித்துறை கமிஷனர் ராஜேந்திரன் பரிசளித்தார். கல்லூரி தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதுநிலை ஆசிரியர் ஜோன்ஸ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பிரடரிக் மனோஜ் நன்றிகூறினார்.