தினமணி 09.12.2013
பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை
குமாரபாளையம் நகராட்சி நாராயணா நகர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் பரிசோதனை, சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.
குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சங்கத் தலைவர் ஆர்.அசோகன் தலைமை வகித்தார். சம்பு பல் மருத்துவமனை மருத்துவர் டி.இளவரசு, ஸ்ரீ சிவசக்தி பல் மருத்துவமனை மருத்துவர் எஸ்.பரத், மருத்துவக் குழுவினர் பல் பரிசோதனை, சிகிச்சை அளித்தனர்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல் நோய், தற்காத்தல், பல் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 378 பேருக்கு இலவச பல் பசை, பிரஷ் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கச் செயலர் பி.பிரகாசன், பொருளாளர் எஸ்.கதிர்வேல், பெற்றோர் – ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.