தினகரன் 07.10.2010
பழநியில் சுற்றித்திரிந்த பன்றிகள் அகற்றம்
பழநி
, அக். 7: பழநி நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால் பிடித்து காட்டுக்குள் விடப்பட்டன. பழநி நகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் நகரில் சுற்றி திரியும் பன்றிகளை உயிருடன் பிடிக்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, மணிகண்டன், சையது அபுதாஹிர், நெடுமாறன், மதுரைவீரன் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அகில இந்திய நாய் மற்றும் பன்றி பிடிப்போர் குழுவைச் சேர்ந்த 15 பேர் குழுவினருடன் நகர் முழுவதும் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 55க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட பன்றிகள் நகராட்சி எல்லைக்கு வெளியே காட்டு பகுதியில் விடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.