தினமலர் 30.09.2010
பழநி நகராட்சி தரம் உயர்த்த கோரிக்கை
பழநி : பழநி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என பழநி எம்.எல்.ஏ.,அன்பழகன் பேசினார்.
இலவச கலர் “டிவி‘ பழநி நகராட்சி பகுதி பயனாளிகளுக்கு வழங்கும் விழாவில் மா.அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: பழநியில் 26 ஆயிரத்து 168 ரேஷன் கார்டுகள் இருப்பதாக வருவாய் துறையினர் தகவல் கொடுத்தனர். பின்னர் 22 ஆயிரம் ரேஷன் கார்டுகள் இருப்பதாக தகவல் கொடுத்தனர். திடீரென 4 ஆயிரம் கார்டுகள் எப்படி குறைந்தது என தெரியவில்லை. எவ்வளவு ரேஷன் கார்டுகள் உள்ளன என்பதை தெளிவான முறையில் வருவாய்துறையினர் தெரிவிக்க வேண்டும். பழநி நகராட்சியில் வரி வசூல் பாக்கி ரூ.3 கோடி வரை உள்ளது. பழநி நகராட்சியை தரம் உயர்த்தி தர வேண்டும்.என்றார்.