தினமலர் 06.03.2010
பஸ் ஸ்டாண்ட் பணி ஆய்வு
ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் 37 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வரும் புது பஸ் ஸ்டாண்ட் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஓசூர் அடுத்த கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 37 லட்சத்து 30 ரூபாயில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இப்பணிகளை டவுன் பஞ்சாயத்து செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், விரைந்து பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர் சுபாஷ்போஸ், கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் விஜயராணி, தேன்னகனிக்கோட்டை செயல் அலுவலர் சந்திரசேகர், உதவி பொறியாளர் சம்பத்குமார், பணி ஆய்வாளர் மகேந்திரன், நாகராஜ், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.