தினகரன் 24.01.2011
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக வீடுகள் அகற்ற அதிரடி முடிவு : வருவாய் துறை நடவடிக்கை
உடுமலை,ஜன.24:
உடுமலை
நகராட்சி பஸ் நிலைய அருகில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
பகுதியையொட்டி வருவாய் துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு 1.80 ஏக்கர்
பரப்பில் உள்ளது. அதேபோல் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம்
உள்ளது. இங்கு 40 வருடங்களுக்கு மேலாக 420 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் உடுமலை நகரில் தற்போது அதிகளவில் மக்கள் தொகை பெருகி வரும்
நிலையில் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட்
விரிவாக்கம் செய்வதற்காக இங்கு குடியிருந்து வந்த மக்களை காலி செய்யும் படி
வருவாய் துறை கூறியுள்ளது. அவர்களுக்கு மாற்றுஏற்பாடாக இந்து
அறிநிலையத்துக்கு சொந்தமான மாரியம்மன் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை
சார்பில் டிசம்பர்(2009) மாதத்தில் 214 பேருக்கு இலவச பட்டாவை வழங்கி அங்கு
குடியேறச் செய்தது. தற்சமயம் 48 குடும்பங்கள் மட்டும் காலி செய்யாமல்
இருந்து வருகின்றனர். கண்ணமாநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் இலவச பட்டா
வழங்கியுள்ள நிலையிலும் 48 குடும்பத்தினர் போக மறுக்கின்றனர்.

இதனால்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் தாமதம் அடைந்து வருவதால் வருவாய் துறையினர்
இவர்களை 28ம் தேதிக்குள் காலிசெய்ய வேண்டும் என இறுதிகெடு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தாசில் தார் சபாபதி கூறிகையில், தற்போது இங்கு வசிக்கும்
மக்களுக்கு கடந்த நவம்பர் மாதம் பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் காலி செய்ய
மறுப்பு தெரிவிப்பதால் வரும் 28ம் தேதி வரை இறுதிகெடு கொடுத்துள்ளோம்.
அதன்பிறகு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் இங்குள்ள வீடுகள்
அனைத் தும் அகற்றப்பட உள்ளதாக கூறினார்.

உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணி துவங்க உள்ளது. இந்நிலையில் அகற்றப்பட இருக்கும் வி.பி புரம் குடியிருப்புகள்.