தினமலர் 22.10.2010
பாகுபாடின்றி பணிகள் நகராட்சித் தலைவர் தகவல்
பந்தலூர் : “நெல்லியாளம் நகராட்சியில், வார்டுகள் பேதமின்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், கட்சி, வார்டுகள் பேதமின்றி, கவுன்சிலர்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிதிக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டுகளில் நிலவும் அனைத்து குறைகளையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்ய இயலாத நிலையில், ஒரு சில வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிப்பது, சரியான செயல் அல்ல. தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து, வார்டு கவுன்சிலர்களுடன் வந்து தெரிவித்தால், முன் னுரிமை அடிப்படையில் பணிகள் மேற் கொள் ளப்படும். இவ்வாறு, காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.