தினமணி 08.03.2010
பாதாளச் சாக்கடை இணைப்புத் தொட்டி: குறைந்த செலவில் கட்ட வலியுறுத்தல்
விருதுநகர், மார்ச் 7: விருதுநகரில நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி ரூ. 23.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தெருக்களில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான இணைப்புத் தொட்டிகள் கட்டும் பணிக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு தெருவில் அனைத்து வீடுகளுக்கும் சாக்கடை இணைப்புத் தொட்டி கட்டும் பணியை குறைந்த செலவில் செய்ய நகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
விருதுநகரில் பாதாளச் சாக்கடை இணைப்புக் கட்டணமாக ரூ. 3,000 முதல் ரூ. 7,000 வரையில் நிர்ணயிகப்பட்டுள்ளது. தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்த தெருக்களில், வீடுகளுக்கு இணைப்புத் தருவதற்கு, அந்தந்த வீடுகளுக்கு இணைப்புத் தொட்டிகள் கட்டுவது அவசியம். இப் பணியை தெருவாரியாக குறிப்பிட்ட ஒப்பந்ததாரரிடம் பொறுப்பை நகராட்சி ஒப்படைத்துள்ளது. வீடு தோறும் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு தலா ரூ. 1,000 வசூலிக்கப்படுகிறது. இத் தொகைககு ரசீதும் தருவதில்லை எனக் கூறப்படுகிறது.
மேலுóம் வீடுகளிலிருந்து கழிவு நீர் செல்வதற்கான குழாய் இணைப்புக்குத் தேவையான பி.வி.சி பைப்புகள் உள்ளிட்டவற்றை வீட்டின் உரிமையாளரே வாங்கித் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புத் தொட்டி கட்டும் பணியை ஒரே ஒப்பந்ததாரர் மேற்கொóள்ளும்போது, இதற்கான செலவு குறைய வாய்ப்புள்ளது. இதற்குரிய மதிப்பீட்டைத் தயாரிக்க நகராட்சி நடவடிக்கை எடுóகக வேண்டும். கூடுதல் செலவை பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது என்று விருதுநகர் 9-வது வார்டைச் சேர்ந்த விஜயபாண்டியன், பாஸ்கர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வீட்டுóக்கும் தனிப்பட்ட முறையில் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு அனுமதித்தால், அதன் அளவு, அமைப்பில் வித்தியாசம் ஏற்பட்டால் பாதாளச் சாக்கடையில் கழிவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படக் கூடும். இதைத் தவிர்க்கும் விதத்தில் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு நியாயமான மதிப்பீடு தயாரித்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் கார்த்திகாவிடம் கேட்டபோது கூறியது:
விருதுநகரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான இணைப்புத் தொட்டி கட்டுதல், ஏற்கெனவே இப் பணியைச் செய்துள்ள அனுபவம் மிகக் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய இணைப்புத் தொட்டி கட்டுவது அவசியம். இதற்கான செலவு அதிகம் எனக் கருதிய ஓரிரு வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து விளக்கினேன். பின்னர், அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அதனால்தான் இணைப்புத் தொட்டிக்கு ரூ. 1,000 எனக் கட்டணம் வசூலிக்கபபடுகிறது. இத் தொகை கூடுதல் எனக் கருதுவோர், இணைப்புத் தொட்டியை அவர்களே கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றார். இவ்வாறு செய்தால் தொட்டி ஒரே மாதிரியாக அமைவதில் பிரச்னை ஏற்படும். அதனால், தெருவில் இணைப்புத் தொட்டி கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் பேசி, மதிப்பீட்டைக் குறைக்க நகராட்சி முயற்சிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.