தினமலர் 23.11.2010
பாதாள சாக்கடைபணி: கலெக்டர் ஆய்வுதர்மபுரி
: தர்மபுரியில் நடந்த வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.தர்மபுரி நகராட்சி பகுதியில் 24 கோடியே 55 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. நெசவாளர் காலனி, குமாரசாமிபேட்டை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் ஆனந்தகுமார் ஆய்வு செய்து, பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.நகராட்சி முதன்மை பொறியாளர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் காமராஜ், ராஜ்மோகன் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.* ரேஷன் கடைகளில் ஆய்வு: தர்மபுரி குமாரசாமி பேட்டை ரேஷன் கடை எண் 4ல் கலெக்டர் ஆனந்தகுமார் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, “பொருட்கள் வாங்கிய நுகர்வோர்களிடம் மாதந்தோறும் பொருட்கள் வழங்கும் முறை குறித்தும், மலிவு விலை பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா?’ என கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் மணி உடன் இருந்தார்.