தினமணி 20.10.2010
பாதாள சாக்கடைப் பணி: எம்எல்ஏ சிவாஜி ஆய்வுதிருவள்ளூர், அக். 19: திருவள்ளூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணியை திருவள்ளூர் எம்எல்ஏ இ.ஏ.பி. சிவாஜி அண்மையில் ஆய்வு செய்தார்.
÷திருவள்ளூரில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் முடித்த பகுதிகளில் தார் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.÷இந்நிலையில் பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடப்பதாகவும், பல இடங்களில் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளதாகவும் புகார்கள் வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை திருவள்ளூர் எம்எல்ஏ இஏபி சிவாஜி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன், பொறியாளர் சாய்ராம், நகர்மன்ற தலைவர் பாண்டியன், திமுக நகர செயலாளர் கா.மு. தயாநிதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
÷தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் டெபோரா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.÷திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடைப் பணிகளை முடிக்கவும், நிறைவடைந்த இடங்களில் நிதி ஒதுக்கி விரைவில் சாலைகள் அமைப்பதாகவும் சிவாஜி கூறினார்