தினத்தந்தி 20.11.2013
பாரம்பரிய உணவு திருவிழா நகராட்சி தலைவர் சித்ரா தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை நகரசபையின் சார்பில்
மகளிர்களுக்கு ஸ்ரீ தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செவிலியர் உள்பட
பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சி மாணவிகளுக்கான
பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
விழாவிற்கு தொண்டு நிறுவன நிர்வாகிகள்
பெருமாள், அனிதா ஆகியோர் தலைமை தாங்கினர். நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) மணி
முன்னிலை வகித்தார். சமுதாய அமைப்பாளர் சந்திரா வரவேற்று பேசினார். சிறப்பு
அழைப்பாளராக ராணிப்பேட்டை நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்து கொண்டு
பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த உணவு திருவிழாவில் பயிற்சி மாணவிகள்
தயாரித்திருந்த 60 வகையான பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் நகரசபை மேலாளர்கீதா,நகரசபை உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம்,
மணிகண்டன், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.