தினமலர் 04.05.2010
பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு : கடைகாரர்களுக்கு எச்சரிக்கை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கடைகளில் பயன்படுத்திய பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப் பட்டதோடு , கடைகாரர்களுக் கும் எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் நடவடிக்கையினால் நகரின் பெரும்பாலான இடங் களில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு குறைந் துள்ள நிலையில் ,பொதுமக்கம் மஞ்சள் பைகளை கைகளில் எடுத்து வந்து பொருட் களை வாங்க த்துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் கடைகாரர் களே பாலிதீன் பைகளை பொதுமக்களிடம் கட்டாயமாக கொடுத்து வருவதாக தகவல் கிடைத்தது. தாசில் தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், நுகர்வோர் இயக்க உறுப்பினர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் மார்க்கெட், ரயில்வே பீடர் ரோடு, துறை ஒமுக ரோடு,பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில் சோதனை மேற் கொண்டனர்.
இதில் டாஸ் மாக் பார் உள்ளிட்ட கடைகளில் இருந்து பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட் டன. ”தடைசெய்யப் பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார்.