தினத்தந்தி 13.02.2014
பாளையங்கோட்டை பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள மேல்நிலை
நீர்தேக்க தொட்டிக்கு, குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் வ.உ.சி.
திடல் அருகே நேற்று உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டு உள்ளார்கள்.
இதனால் பாளையங்கோட்டை 8–வது வார்டு முருகன்குறிச்சி பகுதி, ராஜா
குடியிருப்பு, வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை ஆகிய பகுதிகளில் இன்று
(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) சாமுவேல்
செல்வராஜ் தெரிவித்துள்ளார்.