தினமணி 01.08.2013
பிக்கட்டி பேரூராட்சி மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித்
தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் (பொ) ந.மணிகண்டன் முன்னிலை
வகித்தார். துணைத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில்
பிறப்பு-இறப்பு பதிவுகள், வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு
அங்கீகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில்
மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது
சிவசக்தி நகர், அணிக்காடு, கவுண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை,
தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்னைகள் நீண்ட நாள்களாக
தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், இவற்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டுமென
கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஜெயமணி உறுதியளித்தார்.