தினமலர் 26.05.2010
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்
சென்னை : “சென்னை நகரில் சாலைகளில் திரிந்த, மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டது போல், வரும் 6ம் தேதி முதல் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பிடித்து, மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதியோருக்கும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு, மறுவாழ்வு கொடுக்க தனி சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது, என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.