பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இனி பெறலாம்
கோவை, : கோவையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனின் பெறும் திட்டத்தை மேயர் துவக்கி வைத்தார்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனில் பொதுமக்கள் பெறும் திட்டத்தை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலு சாமி நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘கோவை மாநகராட்சியில் மலிவுவிலை உணவகம் அமைக்கும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. மக்கள் தேவைகளை, குறைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி அவற்றினை உடனே நிவர்த்தி செய்கின்ற வ¬ கயில் தமிழத்திலேயே முதன் முதலாக கோவை மாநகராட்சியில் தான் எஸ்.எம்.எஸ். வசதி துவக்கப்பட்டது. 4000 சதுர அடி கட்டட அனுமதி ஆன் லைனில் ஒப்புதல் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் வசதி துவக்கப்பட்டுள்ளது. 1981 முதல் 2011 வரையிலான 8,99,954 பிறப்பு பதிவுகளும், 5,46,320 இறப்பு பதிவுகளும் ஆன் லைன் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனி யாக கணிப்பொறி சர்வர் அமைக்கப்பட்டு ஒரே நேர த்தில் 2000 பேர் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் லதா, துணை ஆணையர் சிவ ராசு, சுகாதார குழு த¬ லவர் தாமரைச்செல்வி, மண்டல குழு தலைவர்கள் ஆதிநாராயணன், ஜெய ராம், சாவித்திரி, பணிக்குழு தலைவர் அம்மன் அர்ச்சுனன், கல்வி குழு தலைவர் சாந்தாமணி, கணக்கு குழு தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் மாரப்பன், சரஸ் வதி, ராஜேந்திரன், நகர் நல அலுவலர் துள சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.