தினமலர் 24.04.2010
பிறப்பு சான்றிதழ் வழங்கும் விழா
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2006 வருடம் முதல் பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விழாவில் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் தலைமை வகித்தார். கமிஷனர் ரேவதி 165 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் பாண்டி, சிக்கந்தர், ராஜேந்திரன், நாகராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.