தினகரன் 06.08.2010
பில்லூர் நீர் சேகரிப்பு கிணற்றில் பாறை வெடி வைக்க அதிகாரிகள் ஆய்வு
கோவை, ஆக. 6: பில்லூர் நீர் சேகரிப்பு கிணற்றில் பாறை இருப்பதால் அதனை வெடி வைத்து அகற்ற அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.
இதில் மின் வாரியத்தின் சார்பில், முதல் பேக்கேஜில் 13.80 கோடி ரூபாய் செலவில் பில்லூர் அணை அருகே நீர் சேகரிப்பு கிணறு மற்றும் பெரிய கோம்பை மலை குகை நுழைவு பகுதி வரை நீரேற்று பிரதான குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள் ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி இந்த பணி யை நடத்த மின் வாரியத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது. ஆனால், வனத்துறைக்கு சொந்தமான 1.94 எக்டர் நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவியது. படிப்படியாக பிரச்னைகளை சமாளி த்து இடத்தை பெற்று, கடந்த மாதம் கிணறு வெட்டியபோது பிரச்னை மேலும் அதிகமா னது.
100 அடி ஆழத்தில், 20 மீட்டர் அகலத்தில் கிணறு தோண்டப்பட்டு வருகிறது. சில அடி ஆழம் குடி தோண்டிய போது பெரிய பாறை இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் ந்து கிணறு தோண்ட முடியா மல் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே, பாறையை டெட்டனேட்டர் வெடி வைத்து தகர்த்து அகற்றவேண்டும் என மின்வாரியம் தெரிவித்தது. இது தொடர்பாக கோவை ஆர்.டி.ஓ முகமது மீரான், மாநகராட்சி ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்ட அதிகாரிகள், மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று பில்லூர் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். கிணற்றில் இறங்கிய அதிகாரிகள் பாறைகளின் தன்மை களை பரிசோதித்தனர். பெரிய பாறை, 30 அடிக்கும் மேல் இருப்பதாக தெரியவந்தது. இந்த பாறையை அகற்ற பல முறை வெடி வைக்கவேண்டியிருக்கும் என தெரி கிறது.
நீர் சேகரிப்பு கிணற்றிக்கு 50 மீட்டர் தூரத்தில் பில்லூர் அணை அமைந்திருக்கிறது. அதிக திறன் கொண்ட பாறை தகர்க்கும் டெட்டனேட்டர் வெடி வைத்தால் அணையில் அதிர்வு ஏற்படும். அதிர்வினால் அணையில் விரிசல் ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அணையில் உள்ள மீன்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள், வெடி வைத்து பாறை தகர்க்க அனு மதி வழங்கவில்லை.
ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறுகையில், ” கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்தி, பாறை தன்மை, அணை பக்க சுவர் தாங்கும் திறன் போன்றவற்றை பரிசோதித்து வெடி வைக்க அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும், ” என் றனர்.