தினமலர் 09.04.2013
பிளாட்களாகும் விளைநிலம் பேரூராட்சி எச்சரிக்கை
பண்ணைக்காடு:பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் விளை நிலங்கள் அனுமதியின்றி பிளாட்களாக மாறு கின்றன என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். “தினமலர்’ நாளிதழ் செய்தியை சுட்டி காட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் (டவுன் கன்ட்ரி பிளானிங்), லே அவுட் மனைப்பரிவு அங்கீகாரம் பெறாத பிளாட்களை பொதுமக்கள் வாங்கி ஏமாறவேண்டாம். அவ்வாறு பெறப்பட்ட இடத்தில் பேரூராட்சி அடிப்படை வசதிகள் செய்ய இயலாது. விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.